வணக்கம். எனது இணையத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்கமும்,கருத்துக்களும் என்னையும் எங்கள் தமிழையும் வளர்ப்பதற்காகவே........
இவ் இணையத்தளத்தை பார்ப்பதோடு உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

Friday, 15 April 2011


2010ம் ஆண்டு விடைபெறுகிறது. மலரவிருக்கும் புதிய ஆண்டில் நீங்கள் தொடங்க விருக்கும் புதிய முயற்சிகளுக்கு,
காலபலன் பொருத்தமாக இருக்ககிறதா எனப் பார்க்க நினைப்பவர்களுக்காக, இங்கே மலரவிருக்கும் புத்தாண்டில் பன்னிரு ராசிகளுக்குமான பொதுப்பலன் தரப்படுகிறது
இவை பன்னிரு ராசிகளின் கோசார அடிப்படையில் தரப்படுமம் பலன்களாகும். இவை ஒவ்வொருத்தருடைய ஜனன ஜாதக கிரகநிலையின் அடிப்படையில் மாற்றம் பெறலாம் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டுகின்றோம். அனைவரும் புத்தாண்டில் மேலும் உயர்வு பெற வாழ்த்துக்கள்!
மேஷராசிக்கார அன்பர்களே!
மேஷராசி அன்பர்களே! இந்த ஆண்டின் தொடக்கம் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். அதன் மூலம் அமைதியான வாழ்வை பெற போகிறீர்கள். மே மாதத்திற்கு பிறகு எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் மனநிலையை எய்துவீர்கள். பொதுவாக சனிபகவானின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். மேமாதத்திற்கு பிறகு கேது சாதகமற்ற இடத்துக்கு சென்றாலும் குருவின் பார்வையால் அதே பலன்கள் கிடைக்கும்.
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு வரும் தடையை குருவின் பார்வையால் தடுத்து நிறுத்தலாம். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். டிசம்பர் மர்தம் சனிபகவான் இடம் பெயர்வதால் பணப்புழக்கம் சற்று குறையும்.வீட்டில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிலவும். தேவையான அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்புநீடிக்கும். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் மே 8 ஆம் திகதிக்கு பிறகு கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும்.
உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இருக்கும். புதிய தொழில் தொடர்ந்து அனுகூலத்தை தரும். ராகுவால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். ஆனால் மேமாதத்திற்கு பிறகு அவர்களின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில முன்னேற்றத்தை தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். கடன் போன்றவை கிடைப்பதில் தடங்கல் வரலாம்.
மேலும் திடீர் சோதனைக்கு ஆளாகலாம்.வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கணவரை இழந்த ஒரு மூதாட்டியின் உதவியால் தொழில் சிறப்படையும். கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். அதன்பின் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்த வழக்குகளிலும் சிக்கவேண்டாம்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவசெலவு குறையும். உங்களின் மனக்குழப்பம் மே மாதத்திற்கு பிறகு மறையும். தெளிவான மனநிலை இருக்கும்.
உஙகள் பிரச்சினைகள் தீர வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். பத்ரகாளியம்மன் வழிபாடும் உங்களை முன்னேற்றம் அடைய செய்யும். வசதிபடைத்தவர்கள் ஏழைகளுக்கு உதவிடுங்கள்.

ரிஷபராசி அன்பர்களே!

இந்த ஆண்டு சிறப்பான பலன்களை தரும். தடைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடிக்கும் திறன் பிறக்கும். புதுமனை, நிலம் வாங்க நினைப்பவர்களின் எண்ணம் தள்ளி போகலாம். டிசம்பர் மாதம் வாக்கில் தான் இந்த கனவு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள்.
மேமாதத்திற்கு பிறகு குடும்பத்தில் சிறிய பிரச்சினைகள் உருவாகலாம். சிலர் குடும்பத்தை விட்டு சற்று விலகி இருக்கும் நிலையும் உருவாகலாம். குடும்பத்தில் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நல்ல வளத்தை காணலாம். அதிகாரிகள் அனுசரனை இருக்கும். ஆனால் மேமாதத்திற்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும்.
சிலருக்கு வெளியூர் பயணங்கள் அதிகமாக இருக்கும். நவம்பர் மாதம் வரை இந்த ஊசலாட்டம் தொடரும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டிய நிலை இருக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கைக்கு வரும். ஆனாலும் மேமாதத்தில் இருந்து சில வீண் காரணங்களுக்காக அலைய நேரிடலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்களை பெறுவர். டிசம்பரில் புதிய சொத்து வாங்கும் யோகபலன் இருக்கிறது. வழக்கு விவகாரங்களால் கையிருப்பை இழக்க நேரிடலாம். எனவே புதிய வழக்குகள் பற்றி சிந்திக்க வேண்டாம். டிசம்பர் முதல் வழக்குகளின் போக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். உடல்நலம் சிறப்படையும். கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.
உங்களை தொடரும் பிரச்சினைகளை நீக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். துர்க்கைக்கு எலுமிச்ச பழம் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜை செய்யுங்கள். சனீசுவரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி எள் சோறு படைத்து வணங்கலாம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

மிதுன ராசி அன்பர்களே!
கடந்த சில மாதங்களாக நீங்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கலாம். தேவையான பணப்புழக்கம் இருக்கும். செலவுகளும் இருக்கத்தான் செய்யும். எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் குருவின் பார்வையால் அதை எளிதாக முறியடிக்கலாம். மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவப்பெயர் மறையும்.
யாரிடமும் வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் படிப்படியாக மறையும். மே மாதத்தில் இருந்து மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்து வரும் கருத்து வேறுபாடு மறையும். அதுவரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள்கூடுதல் பலனை காணலாம். வேலையில் இருந்து வந்த சலிப்பு மற்றும் திருப்தியின்மை மறைந்து விடும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உய்ர்வு கிடைக்கும். அதன் பின் வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்பாக்கிகளை அடைத்து விடுவீர்கள். புதிய வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். பொதுவாக பணத்தை விட அறிவை மூலதனமாக போடுவது நல்லது. கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வரும். சமூகநல சேவகர்கள் நல்ல பலனை காணலாம். மேமாதம் முதல் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நஷ்டம் என்ற நிலை எழாது. வழக்கு விவகாரங்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறிது சிரமத்தை தரும். பாதகமான முடிவு வராது.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு உங்களிடம் இருந்து வந்த மந்த நிலை மறையும். ஆனால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். ஆனாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
உடல் உபாதைகள் குணம் ஆகும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்க்ள் சற்று கவனமாக இருக்கவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது, பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். மேமாதம் வரை வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்ததியை வழிபடுங்கள். இதனால் மனதில் தைரியம் பிறக்கும்.

கடக ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதல் பலனை பெறலாம். அதற்காக பிற்பகுதியி ல் பலன்களே நடக்குமோ என்று கவலைப்பட தேவையில்லை. எடுத்த எல்லா காரியங்களையும் சிறப்பாக முடிக்கலாம். சிற்சில தடைகள் வந்தாலும் அதை தூசிபோல் துடைத்து எறிவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் வரும். மதிப்பு மரியாதை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். மே மாதத்திற்கு பிறகு அனாவசியமாக எதிலும் ஈடுபட வேண்டாம்.
புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோக பலன் உண்டு. சிலர் கூடுதலான வசதிகள் கொண்ட புதிய வீட்டுக்கு மாறலாம். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதியர் இடையே சிற்சில மனக்கசப்பு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.பணியில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவிஉயர்வு,சம்பள உயர்வு கிட்டும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. உழைப்புக்கு ஏற்ற வருமானம் இருக்கும். வியாபாரிகள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் இருப்பவர்கள் இந்த ஆண்டில் தொடங்குவது நல்ல்து.
கலைஞர்களுக்கு விருது கிடைக்கலாம். தசாபுத்தி நன்றாக இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பும், மதிப்பெண்களும் கூடுதலாாக இருக்கும். விவசாயிகள் நல்ல முன்னேற்றமான பலன்களை காண்பர். எதிரிகள் சரணடைவர். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மே மாதத்தில் குணமடையும். ஆனாலும் சிலர் மனக்கலக்கத்துடன் காணப்படுவர். இறைச்சியை தவிர்ப்பது சிறப்பு.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது பாம்பு புற்றுள்ள கோவில்களுக்கு சென்று பால் ஊற்றுங்கள். மேமாதத்திற்கு பிறகு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சணை செய்து வாருங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு மஞ்சள் நிற ஆடை தானம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நலன் தரும்.

சிம்ம ராசி அன்பர்களே!
எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். அதற்கு ஆண்டின் தொடக்கத்தில் கேதுவும், பிற்பகுதியில் குருபகவாறும் துணையிருப்பர். நல்ல பணப்புழக்கம் இருக்கும். செலவுகளும் ஏற்படும். சிக்கனமாக இருப்பது நல்லது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். மேமாதம் வரை மதிப்பு மரியாதை எதிர்பார்த்த அளவு இருக்காது. வீண் விவாதத்தை தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மேமாதத்திற்கு பிறகு வீட்டில் ஆனந்தம் நீடிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். தம்பதியினர் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நொடியில மறைந்து போகும். உத்தியோத்தில் இருப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு கூடும். தீவிர முயற்சிக்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும்.சகஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. ஆனால் மே மாதம் முதல் உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்கும். வியாபாரிகள் நல்ல முனனேற்றம் காணலாம். அதிக உழைப்பு இருக்கும். ஆனால் அதற்கான வருமானம் இதுவரை தடைபட்டு வந்திருக்கும். இனி அந்த நிலை இருக்காது.
மே மாதத்திற்கு பிறகு பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம் மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் இடையூறுகள் வந்தாலும் அதை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்கலாம். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குருவின் பார்வையால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள் சீரான வருமானம் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் மானாவாரி பயிர்கள் மூலமாகவும், மேமாதத்தில் இருந்து நெல், கோதுமை போன்ற தானிய பயிர்கள் மூலமும் வருமானம் செழிக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு நன்மை தரும். செவ்வாய்க்கிழமை பத்ரகாளி வழிபாடு நன்மை தரும். கால் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவலாம்.

கன்னி ராசி அன்பர்களே!
ஆண்டின் தொடக்கத்தில் குருவாலும், பிற்பகுதியில் ராகுவாலும் நல்ல பொருளாதார வளம் இருக்கும். தேவைகள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு,மனை வாங்க யோகம் கூடிவரும். வண்டி வாகனங்கள் எல்லாம் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். செல்வாக்கு அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ஆண்டின் இறுதியில் சில பிரச்சினைகள் தலைதூக்கல்ாம். ஆனால் உங்கள் சாதுர்யத்தால் விட்டுக்கொடுத்தும் பக்குவத்தால் அதை சமாளித்து முனனேறலாம்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பான பலனை காணலாம்.
வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு மே மாதத்திற்குள் வேலை கிடைக்கலாம். வியாபாரம் சீரான வளர்ச்சியடையும். பணவிரயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சிக்கனம் தேவை. குறிப்பாக இரும்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுட் செயல்படவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், பாராட்டும் கிடைக்கும். மாணவர்கள் இந்த கல்வியாண்டில் சிறப்பான பலனை காணலாம். விவசாயிகளின் மகசூல் சீராக இருக்கும். மானவாரி பயிர்களின் நல்ல லாபம் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாக அமையும்.புதிய வழக்கு விவகாரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
உஷ்ணம், தோல் தொடர்பான வியாதியால் அவதிப்பட்டவர்கள் மே மாதத்திற்கு பிறகு பூரண நலம் பெறுவர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்குங்கள். ராகுகாலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

துலாம் ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுவாலும், பிற்பகுதியில் குருவாலும் பணவரவு இருந்து கொண்டிருக்கும். அதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் மே மாதத்திற்கு பிறகு அனவாசிய செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்கள் சிறப்பாக முடியும். தடைகள் வந்தாலும் குருவின் பார்வையால் முறியடிக்கலாம். உங்கள் மீது ஏற்பட்டிருந்த அவப்பெயர் மே மாதத்திற்கு பிறகு மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். யாருடனும் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். மவுனம் வலிமை வாய்ந்தது.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.உறவினர்கள் வருகையும் அவர்களால் அனுகூலங்களும் கிடைக்கும். மேமாதத்திறகு பிறகு குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். வீடு,மனை வாங்குவதற்கான யோக பலன்கள் உண்டு. ராகுவால் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்து கொள்வீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் வேலைப்பளுவை சந்தித்தாலும், உழைப்புக்கு நல்ல பலன்களை காண்பர். தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் ராகு மற்றும் குருவின் பலத்தால் நல்ல லாபம் காண்பர். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மே மாததிற்கு பிறகு பொருள் விரயம் இருக்கலாம். எனவே யாரையும் நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். இது ஏழரை சனி காலம் என்பதால் புதிய தொழிலை தொடங்க வேண்டாம். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சுமாராகவே இருக்கும். சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் நல்ல பலனை காண்பர். அதிக முதலீடு பிடிக்கும் புதிய விவசாய முறைகளை செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்களில் மே மாதத்திற்கு பிறகு சாதனமான நிலை ஏற்படும். உடல்நலன் சிறப்பாக இருக்கும்.
உஷ்ணம்,பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். மனத்தளர்ச்சி வந்து போகும். ஆஞ்சநேயர் வழிபாடு உங்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கும். முக்கிய கிரகங்களில் சனி பகவானும், கேதுவும் சாதகமாக இல்லை. எனவே அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். குருபகவானுக்கு முல்லை மலர் அணிவித்து வணங்குங்கள். மே மாதத்திற்கு பிறகு துர்க்கையை வணஙகி வாருங்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த ஆண்டின் தொடக்கத்தல் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். சனியின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். எடுத்த காரியம் சிறப்பாக முடியும். உங்கள் செல்வாக்கும் மேம்படும். முயற்சிகளில் தடை இருக்கும். சிரத்தை எடுத்து தீவிர முயற்சியின் பேரில் தான் காரியங்களை செய்து முடிக்க வேண்டியதிருக்கும். பணவரவில் எந்த பாதிப்பும் இருக்காது.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். புதிய வீடு மனை வாங்கலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முனனேற்றம் காணலாம். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை செய்து கொண்ே தனியாக சிறு தொழில் செய்பவரகள் கூடுதல் வருமானத்தை காணலாம். எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறலாம்.
வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கம்ப்யூட்டர், அச்சுத் தொழில், இயந்திர தொழில்களில் இருப்பவர்களுக்கு கூடுதல் வளர்ச்சி உண்டு. புதிய தொழில்களில் இந்த ஆண்டு முதலீட்டை செய்யலாம். கலைஞர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் சிறப்பான பலன்கள் உண்டு. விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். நவம்பர் மாதத்திற்கு பின் எதிலும் அதிக முதலீடுகள் வேண்டாம்.
உஷ்ணம், பித்தம், மயக்கம் போன்ற தொல்லைகள் மே மாதத்திற்கு பிறகு பூரண குணம் அடையும். மனச்சோர்வு நீங்கும்.
நிழல் கிரகங்களான ராகு,கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள்,துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவுங்கள்.

தனுசு ராசி அன்பர்களே!
கடந்த கால சம்பவங்களுக்கு இந்த ஆண்டு விடை கொடுக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில் எந்த ஒரு விடயத்திலும் சற்று முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எந்த செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்தவும். பணத்தை சிக்கனமாக கையாளுங்கள். மே முதல் பிரச்சினைகள் நீங்கி சாதமான பலன்கள் நடைபெறும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கலாம். நீண்டகால ஆசைகள் பூர்த்தியாகும். வீடு, நிலம் போன்றவை வாங்கலாம்.
குடும்பத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு பொற்காலம் பிறக்கும். கலைஞர்கள் திறமையை வெளிக்காட்டி நல்ல பெயரையும், புகழையும் பெறுவர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். விவசாயிகள் மானாவாரி மற்றும் நெல், கோதுமை,கேழ்வரகு, பழவகைகளில் நல்ல மகசூலும், வருமானத்தையும் பெறலாம். நவீன விவசாய தொழில் நுட்பத்தை கடைபிடிக்கலாம். மே மாதத்திற்கு பிறகு வழக்குகள் சாதகமாக அமையும். கேதுவால் இருந்து வந்த உபாதைகள் அனைத்தும் குறையும். மருத்துவ செலவு குறையும்.
சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு சிறப்பான நிலையில் இல்லாததால் அவருக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவினால் தடைகள் அகலும். மேமாதம் வரை குருபகவானுக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்

மகர ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஆண்டின் முற்பகுதியில் கேதுவாலும், பிற்பகுதியில் ராகுவாலும் நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள். செயல்பாடுகள் வெற்றி பெறும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கலாம். குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மே மாதத்திற்கு பிறகு வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருந்தாலும், மனக்கசப்பும் வரலாம். உறவினர்களிடம் வீண் பேச்சுக்கள் வேண்டாம்.
புதிய வீடு,மனை வாங்க பலன்கள் உண்டு. விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை விதைப்பதை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் இழுபறியாக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். மருத்துவ செலவு குறையும். மனஉளைச்சல் விலகிவிடும். பிள்ளைகள் நலனி சிரத்தை எடுங்கள்.
சனிபகவானும், குருபகவானும் இந்த ஆண்டு சாதகமாக காணப்படவில்லை. எனவே சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவிடுங்கள். ராகுகாலததில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

கும்ப ராசி அன்பர்களே!
இந்த ஆண்டின் ெத்ாடக்கம் சிறப்பாக அமையும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் இதுவரை திட்டமிட்டிருந்தால் அவற்றை ஆண்டின் முற்பகுதியில் தொடங்குங்கள். குறிப்பாக வீடுகட்டுதல், நிலம் வாங்குதல் போன்றவற்றை செயல்படுத்தலாம். அது வெற்றிகரமாக முடியும். மே மாதத்திற்கு பிறகு ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுங்கள். பெரியோர்களின் ஆலோசனையும். அறிவுரைகளையும் கேட்டு பெறுங்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் முனனேற்றத்திற்கு பெண்கள் உறுதுணைய்ாக இருப்பர். ஆனால் மே மாதத்திற்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம். உறவினர்கள் வகையில் வீண்குழப்பங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ஆனால் மே மாதத்திற்கு பின் நிலைமை மாறுபடும். எதிர்பார்த்த பலனை காணமுடியாது.
வியாபாரம் சிறக்கும். பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் சிறப்பாக அமையும். புதிய தொழில் வருமானத்தை தரும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். கவனம். மே மாதத்திற்கு பிறகு புதி ய தொழிலை தொடங்க வேண்டாம். மாணவர்கள் இந்த கல்வியாண்டில் சிறந்து விளங்குவர். சிலர் முதன்மை இடம் பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு வயிறு தொடர்பான உபாதை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனிபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேய வழிபாடு தைரியமூட்டும்.

மீன ராசி அன்பர்களே!.
இந்த ஆண்டு எண்ணற்ற பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கும் ஆண்டாக அமைகிறது. பொருளாதார வளம் அதிகரிக்கும். குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் மே மாதம் வரை வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கி அன்பு மேம்படும். உறவினர் வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். புதிய வீடு ,சொத்து வாங்கலாம். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். கடந்த காலங்களில் இருந்து வந்த பிற்போக்கான நிலைமை மாறும். ஆற்றல் மேம்படும். நல்ல பதவியும் , பேரும், புகழும் கிடைக்கும்.
விரும்பிய இடத்திற்கு மாறுதல் ஆகலாம். வியாபாரிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். வியாபாரத்தை விரிவாக்க மே மாதத்திற்கு பின் சாதகமான சூழல் காணப்படுகிறது. எதிரிகளின் இடையூறு இருக்கும். ஆனால் அதை முறியடித்து விடுவீர்கள். மே மாதம் வரை எவருடனும் எச்சரிக்கையுடன் பழகவும். கலைஞர்கள் புகழ்,பாராட்டுக்களை பெறுவர். மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். விவசாயிகள் நெல், கோதுமை, கடலை பயிர்களில் லாபம் காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் விலகும். விபத்து பயம் நீங்கும்.
நவக்கிரகங்களில் சனிபகவானுக்கும், ராகுவுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். வசதி படைத்தவர்கள் காளஹஸ்திக்கோ, திருநாகேசுவரத்திற்கோ சென்று வந்தால் சென்று வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள்.

விளம்பரம் LUXSUMI VIDEO AND PHOTO

LUXSUMI VIDEO AND PHOTO