தென்னங்கன்றில் தோன்றிய அம்மன்
குறித்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த தென்னங்கன்றுகளுடன் வைத்த அனைத்துக் கன்றுகளும் காய்க்கத் தொடங்கிவிட்டது ஆனால் இந்தக் கன்று மட்டும் பழுதடைந்து வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தென்னங்கன்றை தறிக்க முற்பட்டபோது தென்னங் கன்றிலிருந்து ஒளிதோன்றியது. இதனால் அதை தறிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பின் சென்று பார்க்கையில் ஒரு கண் மட்டும் தென்பட்டது. இதன் பின்பு (நேற்று) காலை 7மணியளவில் மீண்டும் தறிக்க முற்பட்டபோது இரண்டு கண்களும் புருவமும் தென்பட்டதோடு முகத் தோற்றத்தையும் ஓரளவுக்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பின் தென்னங்கன்றை சுற்றிப் பார்த்த போது பின்புறத்திலும் ஓரளவுக்கு அவதானிக்க கூடியவாறு கண்களும் புருவமும் தென்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.